தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி மருந்து

வருகின்ற 16-ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளன.

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் ஆகவே இன்று காலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளன.கொரோனா தடுப்பூசிகளுடன் புனேவில் இருந்து சென்னை வந்தடைந்த விமானத்தில் இருந்து தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கிற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகின்றன.தடுப்பூசிகள் தமிழக மருந்துக் கிடங்கு உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்கட்டமாக தடுப்பு மருந்துகள் வைக்கப்படவுள்ளன.பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இன்று மாலை பிரித்து வழங்கப்பட உள்ளது.