28 C
Chennai
Sunday, October 24, 2021

ஹவாயில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ….!

ஹவாயில் 6.1, 6.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஹவாய் தீவின் கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து இரு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. ஹவாய் தீவின் நாலேஹூ எனும் பகுதிக்கு 29 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 20 நிமிட இடைவெளிகளில் ஏற்பட்ட இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் 6.1 மற்றும் 6.2 என ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

இந்திய நேரப்படி அதிகாலை 3:18 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மிகவும் குலுங்கி உள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை உள்ளிட்ட எந்த எச்சரிக்கைகளும் கொடுக்கப்படவில்லை.

spot_imgspot_img

Hot Topics

Read More