சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம்: தொடரும் இழுபறி

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம்: தொடரும் இழுபறி

  • முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையான சிவங்கை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவுகிறது

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை  முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது. அதன் முடிவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காணும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

தமிழகத்தில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சிவகங்கையில் மட்டும் இழுபறி நீடித்து வருவதால், அங்கு வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

இதனிடையே, கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க கோரி சிவகங்கை மாவட்ட காங்கிரஸார் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *