திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை நாடு கண்டுள்ளது – ப.சிதம்பரம்

2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் பேசுகையில், நாட்டில் வளர்ச்சிக்கான தேவையைத் தூண்டுவதில் அரசாங்கம் தவறிவிட்டது.மொத்த உள்நாட்டு உற்பத்தியானது “திறமையற்ற பொருளாதார முறைகேடு” காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரங்களுக்குச் சென்றுவிடும்.2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றது.ஏழைகளுக்கு ஒரு சிறிய அளவு பணம் கூட வழங்கப்படவில்லை.

தேவையைத் தூண்ட வேண்டும். தேவையைத் தூண்டுவதற்கான சிறந்த வழி மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பது ஆகும்.ஆனால் இதில் இந்த அரசாங்கம்  தோல்வியுற்றுள்ளது.நான் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் அரசு இன்னும் பாடங்களைக் கற்கவில்லை. நீங்கள் பாடங்களைக் கற்காததன் விளைவாக, இன்னும் 12 மாதங்கள்  ஏழைகள் கஷ்டப்பட்டு, பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். நாடு மூன்று ஆண்டுகளாக “திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை”  கண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.