கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இந்த முடிவு காங்கிரஸ் பல தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதை வைத்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
மேலும், மற்ற கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறினார். முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | It is certain that Congress will form the government in Karnataka. BJP will attempt to strike a deal with MLAs of other parties and independent candidates: Congress leader & former MP CM Kamal Nath pic.twitter.com/AH4BmGCWEB
— ANI (@ANI) May 13, 2023