வேளாண் மசோதா எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் “ரிட்” மனு தாக்கல் செய்யவுள்ள காங்கிரஸ் எம்.பி.!

வேளாண் சட்டத்தினை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன், உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை எதிர்த்து மத்திய தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர்.

இந்தநிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக தற்பொழுது நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளார்.