தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது.!

கரூர் மாவட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்யபட்டுள்ளது.

கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 6 அடி உயர புதிய காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக நகர நிர்வாகிகள் என பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட வந்த நிலையில், காவல்துறையினர் கட்டுமான பணிகளை தடுக்க கூடாது எனவும் இல்லையென்றால் கைது செய்வோம் என்று கூறியதற்கு, கைதாக மாட்டோம் என்று கூறி நீண்ட நேரம் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும் என்று கூறி கைதாவதற்கு பெண் காவல்துறையினர் மற்றும் காவலர்கள் இணைந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைதாகி உள்ளனர் என தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்