8 மாதத்திற்கு முன்பே தரகர் சஞ்சய் ஜெயின் என்னை தொடர்பு கொண்டார் – காங்கிரஸ் எம்எல்ஏ

கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தன்னை தொடர்பு கொண்டதாக  காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்து வந்தார்.ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சச்சின் தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.இதன் பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு முறை  எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது.இந்த இரு கூட்டத்திலும்  சச்சின் பைலட் மற்றும் அவரது எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பங்கேற்கவில்லை.பின்னர்  துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

இதனால் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.மேலும் வருகின்ற செவ்வாய் கிழமை வரை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது.இதற்கு மத்தியில் தான் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது.அந்த ஆடியோவில் ,மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மா ,சஞ்சய் ஜெயின் , அசோக் அரசை கவிழ்ப்பது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்தது.இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியது.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அரசை கவிழ்க்கும் சதி செயலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே  இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ   ராஜேந்திர குதா கூறுகையில்,கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தன்னை தொடர்பு கொண்டதாக  தெரிவித்துள்ளார்.மேலும் என்னிடம் வந்து பாஜக மூத்த தலைவர்களான வசுந்தரா ராஜே மற்றும் பிற   தலைவர்களைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.ஆனால்  இந்த முயற்சியில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

20 mins ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

23 mins ago

டீயா.. காபியா.. எது நல்லது?

Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி  இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…

32 mins ago

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

1 hour ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

1 hour ago

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

2 hours ago