மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி..!

By

Congresscondoled

மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை பெங்களூருவில் உயிரிழந்தார். 79 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனது மகன் கண்காணிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார். இந்நிலையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வராது உடலுக்கு காங்கிரஸ் மூத்தத்  தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல தலைவர்கள் மறைந்த முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.