கொரோனா மத்தியில் 97% இந்தியர்கள் ஏழ்மை – ராகுல்காந்தி காட்டம்..!

கொரோனா மத்தியில் 97% இந்தியர்கள் ஏழ்மை – ராகுல்காந்தி காட்டம்..!

ஒரு மனிதனின் ஆணவத்தால் கொரோனா மத்தியில் 97% இந்தியர்கள் ஏழ்மையாகியுள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வது அலையின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசு சரியான முறையில் கையாள தவறியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்விளைவாக 97% இந்தியர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் வருமானத்தில் மிகப்பெரிய சரிவினைக் கண்டுள்ளதாகவும், இதற்கு மத்திய தலைமையின் ஆணவமே முக்கிய காரணம் என்றும் சாடியுள்ளார்.

அடுத்ததாக கொரோனா வைரஸின் பல்வேறு உருமாற்றங்கள் பொருளாதார அழிவுக்கு இரண்டாவது காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று மத்தியில் மத்திய அரசாங்கம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube