பிரதமர் மோடியை காணவில்லை ? அரசு பேச்சை நிருத்திவிட்டு செயல்படும் நேரம் இது – காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி காட்டம்

இந்திய பிரதமர் ஆலோசனை மற்றம் உரை நிகழ்த்துவதற்கான நேரம் இது இல்லை என்று காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி  கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மக்கள் ஆங்காங்கே கொரோனாவால் மடிந்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை இன்மை போன்ற காரணங்கலாலும் மக்கள் அநியாயமாக பலியாகி வருகின்றனர். இந்த சூழலில் அடிக்கடி இந்திய பிரதமர் காணொலி வாயிலாக மக்களுக்காக நேரம் ஒதுக்கி உரையாற்றியும், ஆலோசனை வழங்கியும் வருகிறார்.

மேலும் பிரதமர் மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் மருத்துவ ஊழியர்களுடனான கலந்துரையாடலில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க உரையாற்றினார், இதனையடுத்து பிரதமரின்  இந்த செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது, மேலும் காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி  கே.சி வேணுகோபால் “மோடியை கொரோனா தொற்று காலங்களில் காணவில்லை” என்றும், அவர் உரைகள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக செயல்பட வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.  மேலும் அவர், “அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?…எந்த பதிலும் இல்லை ” என்றும் கூறியுள்ளார். மேலும் அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Recent Posts

குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து …

14 seconds ago

அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…

17 mins ago

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…

36 mins ago

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

1 hour ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

2 hours ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

2 hours ago