காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன – அமித் ஷா

காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன – அமித் ஷா

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக பிரபல தொலைக்காட்சி ஊடகத்தின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன.அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது. இந்தச்செயல் அவசரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது.இது அவசரநிலையை நமக்கு நினைவூபடுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube