களரிப்பயட்டை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்தற்கு சத்குரு வாழ்த்து..!

கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “களரிப்பயட்டு – ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு.இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்கவேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை.இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது,கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கட்கா, களறிப்பயட்டு, தங்-டா, மல்லர்கம்பம் ஆகிய 4 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ‘யோகாசனா’ அறிமுக விளையாட்டாகவும் (debut Sport) இடம்பெற உள்ளது. இப்போட்டிகள் அடுத்தாண்டு ஹரியானாவில் நடத்தப்படும் எனவும் கேலோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 ‘ஈஷா கிராமோத்ஸவம்’ என்ற பெயரில் தமிழக கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வரும் ஈஷாவுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம், ‘கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ விருதை வழங்கி கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

murugan
Tags: sadhguru

Recent Posts

‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…

1 min ago

42 வயசுல இப்படியா? தோனியை பார்த்து வியந்த பிரையன் லாரா!

Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…

19 mins ago

தள்ளிப்போகும் பிரஸ் மீட்.! துல்லியமான தேர்தல் நிலவரம் எப்போது தெரியுமோ.?

Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…

37 mins ago

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

1 hour ago

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…

1 hour ago

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

1 hour ago