தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.

நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவி தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்ததை அடுத்து, இன்று நியமித்தார். சென்னை ராஜ்பவனில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆளுநருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் ஆளுநராக நீங்கள் பொறுப்பேற்றதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறந்த வரலாறு மற்றும் வளமான பாரம்பரியத்துடன், எங்கள் புகழ்பெற்ற மாநிலத்திற்கு உங்களை முழு மனதுடன் வரவேற்கிறேன். உங்களின் ஆழ்ந்த ஞானமும், பல வருடங்களாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவமும், இந்த புதிய நிலைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது மேலும் உயரும் என்றார்.

எனது  மனைவி மறைவிற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நான் எனது சொந்த தேனி மாவட்டத்தில் இருப்பதால், சென்னையில் நடந்த ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு எனது உண்மையான வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவிப்பதாகவும் இன்னும் சில நாட்கள் அங்கு இருக்க வேண்டும் எனவும் நான் சில நாட்களில் சென்னைக்கு வந்து, ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு ஆளுநருக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பித்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்