சிறைக்கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல்..! 58 கைதிகள் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள க்யாகுல் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழப்பு.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள க்யாகுல் நகரில் மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக க்யாகுல் கருதப்படுகிறது.  போதைப் பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் 2 குழுக்கள் சிறைக்குள் சரமாரியாக மோதிக் கொண்டனர்.

சனிக்கிழமை காலையில் தொடங்கிய இந்த பயங்கர சண்டையில்,  இரு குழுக்களும், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்கிக் கொண்டனர்.  இந்த மோதலில் 58 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில்,  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினர் தலையிட்டு இந்த மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த செப்டம்பரில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் மட்டும் 300-க்கும் அதிகமானோர் சிறை கலவரத்தில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.