சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால், மாக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா வீரியம் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி தெரிவித்துள்ளது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் படும் துயரத்தால் கருத்தில் கொண்டு சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரையிலாவது நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube