,

படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

By

K Balakrishnan

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சட்டமன்றத்தில் அறிவித்தபடி நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் அறிவித்தபடி நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதை சிபிஐ(எம்] வரவேற்கிறது. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் குட்கா உள்ளிட்டு போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.’ என தெரிவித்துள்ளார்.