,

கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டதற்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் புகார்…!

By

opposition

கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டதற்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் மீது டெல்லி காவல்நிலையத்தில், அவினிஷ் மிஷ்ரா என்ற நபர் புகார். 

கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 24 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.

பெங்களூரில் நடைபெற்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டதற்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் மீது, டெல்லியில் உள்ள பாரகாம்பா காவல் நிலையத்தில் அவினிஷ் மிஷ்ரா என்ற நபர் புகாரளித்துள்ளார். இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகவும், தேர்தலில் முறையற்ற வகையில் செல்வாக்கு மற்றும் ஆளுமைக்காக அந்தப் பெயரைப் பயன்படுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாரகாம்பா காவல் நிலையத்தின் எஸ்ஹோ மஹாபீர் சிங் கூறுகையில், நாங்கள் புகாரை ஏற்றுக்கொண்டோம், இதில் சட்ட அம்சங்கள் உள்ளன. எங்கள் மூத்த அதிகாரியுடன் பேசுவோம். அதன்பிறகுதான் அதை மேலும் எப்படி தொடரலாம் என்று பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.