கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கமலின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இருந்து வருகின்றது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  கமலஹாசன் முறையிட்டார்.

ஆனால் உயர்நீதிமன்ற மதுரை  கிளை , கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.