வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாக அவர் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

தற்போது நாக்கை அறுக்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாக அவர் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here