ஊழலில் போட்டி…! சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல்…! – மு.க.ஸ்டாலின்

சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல் செய்கிறார். உள்ளாட்சியில் ஊழல் செய்த அமைச்சர் வேலுமணி தான்.

கோவை கிணத்துக்கடவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பரப்புரையில் ஈடுபட்டார். அவர், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வராஜனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஊழல் செய்வதையே தொழிலாக கொண்ட  உள்ளார் என்றால் அது வேலுமணியாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இப்படிப்பட்ட வேலுமணியை அரசியலில் நீடிக்க விடக் கூடாது. சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல் செய்கிறார். உள்ளாட்சியில் ஊழல் செய்த அமைச்சர் வேலுமணி தான். திமுக ஆட்சியில் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.