கோழி விவசாயிகளுக்கு இழப்பீடு.. கேரள மாநில அரசு அறிவிப்பு..!

கேரளாவில் உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டுள்ளது.

அதன்படி, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி விவசாயிகளுக்கு இழப்பீடாக 2 மாதங்களுக்கும் மேலான பறவைகளுக்கு தலா ரூ .200 மற்றும் 1 மாதத்திற்கும் குறைவான பறவைகளுக்கு தலா ரூ .100 வழங்கப்படும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் இருந்து 46,000 பறவைகளையும், தேவைப்பட்டால் அண்டை பகுதிகளைச் சேர்ந்த மேலும் 12,000 பறவைகளையும் கொல்ல மாநில கால்நடை பராமரிப்புத் துறை முடிவு செய்துள்ளது. பறவைகள் கொல்லப்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் 10 நாள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்வார்கள். அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மாதிரிகளையும் சோதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலபிரதேசத்தில் புலம் பெயர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்த போது பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan