ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம்…. மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்…..!!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக  தனி சிறப்பு சட்டம் இயற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தீர்பளித்தது.இது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் எற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சரை சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்  , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ் அர்ஜூனன் , நிர்வாகிகள்  ராஜா , பேச்சிமுத்து  மற்றும்  வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தவை எதிர்த்து , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுதாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment