பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி முடிவு செய்ய குழு..!

பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி முடிவு செய்ய குழு..!

  • மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும்.
  • குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும்.

பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக் கேட்பு அறிக்கையை இன்று மாலை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம்  சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து முடிவு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

பிளஸ் டூ தேர்வு ரத்தான நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழுவில் உயர்கல்வித்துறை செயலாளர் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது தொடர்பாக ஆய்வு செய்து குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும்.

குழு சமர்ப்பிக்கும் மதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

author avatar
murugan
Join our channel google news Youtube