Commercial Cylinder:வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.171 குறைவு

பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ₹171.50 குறைத்துள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலையானது ரூ.171.50 குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக சிலிண்டரின் விலையானது ரூ.2021.50 என விலை நிர்ணையம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும்  வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.1118.50 க்கு விற்பனையாகிறது.

டெல்லியில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை இப்போது ரூ.1856.50 ஆகவும், கொல்கத்தாவில்19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை  ரூ.2132.00 லிருந்து ₹1960.50 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Dinasuvadu Web