பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 66.?

இந்த படத்தை மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ள தாகவும் கூறப்படுகிறது. தளபதி 

By bala | Published: Jun 04, 2020 12:49 PM

இந்த படத்தை மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ள தாகவும் கூறப்படுகிறது.

தளபதி  தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இந்த நிலையில் இதற்கு அடுத்து தளபதி விஜய் நடிக்கும் படங்களின் பற்றி தகவல் வெளியாகியுள்ளது, தளபதி விஜயின் 65வது திரைப்படம் இயக்குனர் ஏஆர்முருகதாஸ் இயங்குவதாகவும், அந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜயின் 66 வது படத்தை பிக் பாஸ் போன்ற இந்திய அளவில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான எண் டேமோல் ஷைன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ள தாகவும் கூறப்படுகிறது. இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc