தளபதியை வைத்து ஒரு கமர்ஷியல் திரைப்படம் இயக்கனும்- பார்த்திபன்.!

நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் அவர்களின் ஆசை விஜய் அவர்களை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தை இயக்க வேண்டும் என்பதாம்.

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய்.இவருடன் படத்தை இயக்கவும், நடிக்கவும் பலரின் ஆசையும், கனவும் கூட. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.தற்போது ரசிகர்கள் இவரது அடுத்த படத்தினை குறித்த தகவலை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு விஜய் அவர்களை வைத்து ஒரு கமர்ஷியல் படம் இயக்க வேண்டும் என்பது ஆசை என்றும், அந்த படம் தனது ஸ்டைலில் கமர்ஷியலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடிப்பாரா, அவரது ஆசை நிறைவேறுமா என்று வருங்காலங்களில் தான் தெரிய வரும்.