நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள் பற்றி அறியலாம் வாருங்கள்!

உடலுக்குத் தேவையான அதிக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டுள்ள காய்கறிகளில் நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய காய்கறிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பச்சை காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் தாதுக்கள், புரதங்கள் என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நன்மைகள் அடங்கியுள்ளது. காய்கறிகளை அதிக அளவில் உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். மேலும் இந்த காய்கறிகளில் சிலவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். அதிக அளவில் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் ஏ, சி சத்துள்ள அதிகமுள்ள காய்கறிகளின் மூலம் தான் புற்றுநோயை தடுக்கக்கூடிய தன்மைகள் உள்ளது. குறிப்பாக நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுவதால் இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

மேலும் கீரைகளில் அதிக அளவு ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்டு இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கீரைகளில் காணப்படக்கூடிய லூடின் எனும் ஊட்டச்சத்து காரணமாக புற்றுநோய் உருவாகக் கடிய செல்களை அழிக்க இது உதவுகின்றது. மேலும், கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிக கால்சியம் சத்துக்களை கொண்டுள்ளதால் இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் முட்டைகோஸில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் சத்துக்கள் காணப்படுகிறது. மீன்களையும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவற்றை சிலருக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை நீக்குவதற்கும் காய்கறிகளை சாப்பிடுவது மருந்தாக அமையும்.

author avatar
Rebekal