கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் கட்டுக்கடங்காத சத்துக்கள் பற்றி அறியலாம் வாருங்கள்!

கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் கட்டுக்கடங்காத சத்துக்கள் பற்றி அறியலாம் வாருங்கள்!

தமிழர் திருநாள் தை திங்கள் முதல் நாளில் நாம் கொண்டாடும் பொங்கல் அன்று நாம் அனைவரும் பொங்கல் பொங்கி கொண்டாடுவது வழக்கம். ஆனால், முக்கியமாக நமக்கு நினைவுக்கு வருவது கரும்பு தான். தித்திக்கும் சுவை கொண்ட கரும்பு சுவைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியத்திற்காகவும் நாம் சாப்பிட வேண்டும்.

ஆனால் அதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இப்பொழுது நம் கரும்பில் என்னென்ன சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது என்பது பற்றி பார்க்கலாம். கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மெக்னீசியம், தயாமின், புரோட்டின் இரும்பு சத்து என பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.

இந்த கரும்பை சாப்பிடுவதால் இதில் உள்ள இயற்கை சர்க்கரை காரணமாக உடலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் கரும்பில் உள்ள அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் வலிமையான எலும்புகள் உருவவும், பலனின்றி காணப்படும் எலும்புகள் பலம் பெறவும் உதவி செய்கிறது.

பொட்டாசியம் இதில் அதிகம் இருப்பதால் மன அழுத்தத்தை போக்கக்கூடிய மகத்தான குணமும் இந்த கரும்புக்கு இருக்கிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்து காணப்படுவதால் புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகளை உடலில் அழிப்பதோடு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மேலும் இதில் உள்ள சோடியம் சத்துக்கள் காரணமாக சிறுநீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்து கிட்னியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கரும்பில் உள்ள எலக்ட்ரோலைட் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியம் வலுப்படுவதுடன், தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பதால்  கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

மேலும் இளம் வயதிலேயே வயதான தோற்றம் பெற்று உள்ளவர்களும் இதனை தடுப்பதற்கு கரும்பு அதிகம் குடிக்கலாம். இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் காரணமாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கரும்புச் சாறு அல்லது தினமும் ஒரு கரும்பு துண்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சத்து காரணமாக இதனை தினமும் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறைந்து சீரான ரத்த ஓட்டம் உருவாக வழிவகை செய்கிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *