, ,

பிரமிக்க வைக்கும் நன்மைகள் கொண்ட பீட்ரூட் பற்றி அறியலாம் வாருங்கள்!

By

பீட்ரூட்டில் இரத்தத்தை அதிகரிக்க செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, இந்த பீட்ரூட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மைகள் தெரியாது. அவற்றில் சிலவற்றை அறியலாம் வாருங்கள். 

பீட்ரூட்டின் நன்மைகள்

பீட்ரூட்டில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நைட்ரேட் மற்றும் ஜிங்க் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பீட்ரூட்டை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து குடித்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள அழுக்குகளை போக்கும். மூல நோய் உள்ளவர்கள் இதனை கசாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமடையலாம். தினமும் இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து வந்தால் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் காரணமாக புற்றுநோயை குணப்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை அதிகம் உட்கொள்ளலாம், இரத்தத்தின் அழுத்தத்தை குறைக்க உதவும். செரிமான கோளாறுகளை நீக்க உதவுவதுடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை போக்கும் திறன் கொண்டது. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். முக பொலிவு மற்றும் சிக்கபலகான உதடுகளை தரும். எலும்புகள் வலுவடையவும் உதவும்.

Dinasuvadu Media @2023