போகிப் பண்டிகையின் வரலாறும், கொண்டாடப்படுவதற்கான நோக்கமும் அறியலாம் வாருங்கள்!

பழையன கழிந்து புதியன புகும் போகி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் வரலாறு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

தமிழ் வருடத்தில் மார்கழி மாதம் கடைசி நாளன்று பொங்கல் திருநாளுக்கும் முந்தின தினம் கொண்டாட படக்கூடிய பண்டிகை போகி பண்டிகை. பழைய பொருட்களை எரித்து புதிய வருடத்திற்குள் நுழைவதற்காக கொண்டாடக்கூடிய இந்த போகிப்பண்டிகை பழங்காலங்களில் எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா? வீட்டில் உள்ள பழைய உடைகள் மற்றும் பொருட்களை வீட்டின் முன்பு எரித்து பழையவை அனைத்தும் கழிந்துவிட்டது என மனதார நினைக்கக்கூடிய பண்டிகையாக தான் இந்த போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த பழைய பொருட்களை எரிப்பது போல பழைய காயப்பட்ட மனதையும் தீமையான எண்ணங்களையும் எரித்து புதிய மனிதனாய் புத்துணர்வோடு வாழுவதே இந்த போகிப் பண்டிகையின் நோக்கமாக கருதப்படுகிறது. போக்கி என்று அழைக்கப்பட்ட இந்த பண்டிகை நாளடைவில் மருவி போகி என்று ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், முந்தைய காலத்தில் எல்லாம் பழைய மண்பாண்டங்கள், துணிகள் ஆகிய பொருட்களை எரித்து தான் இந்த பண்டிகையை கொண்டாடினார். ஆனால் தற்போது அதிக அளவில் பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் தான் எரிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நாம் தூண்களை மட்டும் எரித்தும் கொண்டாடலாம். இந்த வருடம் 2021 ஜனவரி 13-ஆம் தேதி புதன்கிழமை அன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை பிறக்க உள்ள புது ஆண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடப்பட கூடிய இந்த போகிப் பண்டிகையில் வீட்டுக்கு வர்ணம் பூசி அழகு படுத்துவதும் வழக்கம். இந்த பண்டிகை முற்காலத்தில் என்ன நோக்கத்திற்காக கொண்டாடப்பட்டது என்றால் நம் உறவுகளுடன் இருக்கக்கூடிய மனக்கசப்பு மற்றும் தீய எண்ணங்கள் நீங்கி அவருடனான உறவு மேம்பட்டு மகிழ்ச்சியுடன் வாழவும், பிறருடன் ஒற்றுமையாக இருக்கவும் தான் கொண்டாடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal