தர்பூசணி பழத்தில் உள்ள தாராளமான நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

தாராளமாக இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும், எக்கச்சக்கமான நன்மைகளையும் கொண்டுள்ள தர்பூசணியின் பயன்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம்.

தர்பூசணியின் நன்மைகள்

ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூக்கும் தாவரங்களில் ஒன்றான தர்பூசணிப் பழம் அதிக நீர்ச்சத்து நிறைந்த பழம். தர்பீஸ், தண்ணீர் பழம், குமட்டிப்பழம் எனப் பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தர்பூசணி பழம் அனைத்து இடங்களிலும் நீர் சத்தை நம்பியே உண்ணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தர்பூசணி பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி உள்ளன. அவைகள் குறித்து அறிந்துகொள்ளலாம். தர்பூசணி பழம் கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடல் வறட்சி நீங்கி உடல் பளபளப்பாக மாறுவதுடன் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுவதுடன், வியர்வையாக உடலின் கெட்ட நீர்கள் வெளியேறுவதையும் ஊக்குவிக்கிறது. மேலும் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இநத தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, கோடை காலங்களில் ஏற்படக்கூடிய வறட்சியைத் தடுப்பதற்கு இந்த பழம்  உதவுகிறது.

பழத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதுடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கவும் உதவி செய்கிறது. உடலில் ஊட்டச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இதில் உள்ள தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் கால்சியம் ஆகியவை காரணமாக உடலுக்கு தேவையான அத்தியாவசிய நன்மைகளை அளிக்க போதுமானதாக இருக்கிறது. ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் இந்த பழத்தை தொடர்ச்சியாக சாப்பிடலாம். இது நரம்பு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி ஆண்மை குறைபாடுகளை போக்குகிறது.

மேலும் இளம் வயதில் ஏற்படக்கூடிய முதிர்ச்சியை நீக்குவதற்கு ஆண் பெண் இருபாலருக்குமே இது உதவுகிறது. உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், இரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கவும், இதயம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவி செய்கிறது. மேலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுவதுடன் ஆரோக்கியமான உடலையும் தருகிறது. மேலும் புற்றுநோய் செல்கள் உடலில் வராமல் பாதுகாக்கிறது. கண் பார்வைக்கு உதவும், கண்களில் உள்ள செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தர்பூசணி பழத்தின் நன்மைகள் அறிந்து, ஆரோக்கியமாக வாழ்வோம்.

author avatar
Rebekal