,
Plane Crash In Colombia

கொலம்பியாவில் விமானம் விபத்து: 5 அரசியல்வாதிகள் பலி!

By

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 5 அரசியல்வாதிகள் உயிரிழந்தனர்.

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் விமானி என 6 பேர் உயிரிழந்தனர். இவர்கள் முன்னாள் கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ உரிபேவின் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விலாவிசென்சியோவில் இருந்து பொகோட்டாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விபத்தில் உயிரிழந்த அரசியல்வாதிகளுக்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மற்றும் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.