தேர்தல் வரும் வேலையில் 17 ஆண்டிற்கு பிறகு மின்சார வசதி கிடைத்த பள்ளி!

  • கோவை மாவட்டத்தில் உள்ளல் அரசு பள்ளி ஒன்றுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மின் இணைப்பு கிடைத்துள்ளது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பெரியநாயக்கம்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தடாகம் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 47 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், இந்த பள்ளிக்கு மின் இணைப்பு வசதி இதுவரை செய்து தரப்படாமல் இருந்தது.

மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் வசதியுடன் அப்போது வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மின்சார வசதி இல்லாமல் தேர்தல் நடத்துவது சிரமத்தை ஏற்படுத்தியதாக அந்த சமயத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவ்வாறான சிரமங்களை எதிர்வரவுள்ள தேர்தலின் போது தவிர்க்கும் பொருட்டு, இப்பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை மின் இணைப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment