முகக்கருமையை போக்கும் தேங்காய் பால்!

முகக்கருமையை போக்கி, வெண்மையாக மாற்றும் தேங்காய் பால்.  இன்றைய இளம் தலைமுறையினரின்

By leena | Published: May 11, 2020 07:47 AM

முகக்கருமையை போக்கி, வெண்மையாக மாற்றும் தேங்காய் பால். 

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே, அவர்களது நிறம் தான். இவர்கள் தங்களாது முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவு செய்கின்றனர். இவ்வாறு பணத்தை செலவு செய்வதால் நாள்ல தீர்வு கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் கெமிக்கல் கலந்த பலவகையான கிரீம்களை பணத்தை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. 

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முக கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 

தேவையானவை 

  • தேங்காய் பால் 
  • கடலை மாவு 

செய்முறை 

முத்தாலில் தேவையான அளவு தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், பின் ஆதில் பாதியளவு கடலைமாவை சேர்த்து, நன்கு பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ள வேண்டும். 

பின் இந்த பேஸ்ட்டை நன்கு முகத்தில் பூசி, அந்த பேஸ்ட் காயும் வரை காத்திருக்க வேண்டும். நன்கு காய்ந்த பின், தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகம் வெண்மையாக மாறிவிடும். 

Step2: Place in ads Display sections

unicc