முதலமைச்சர் பழனிசாமி ஸ்டாலினின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் !

முதலமைச்சர் பழனிசாமி ஸ்டாலினின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் !

ஒக்கி புயல் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் பிரின்ஸ் பேச்சுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார் .
அவர் கூறிய பதில் , புயல் சின்னம் உருவாகும் முன்பே மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.30.11.2017 வானிலை ஆய்வு மையத்தில் புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்டது.
புயல் சின்னம் குறித்த தகவல் பெறப்பட்ட பின்னர் மீனவ மாவட்டங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது . அரசின் நடவடிக்கையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் கரை சேர்ந்த 1,124 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 11,986 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.3,522 மீனவர்கள் இதுவரையில் பத்திரமாக கரைக்கு திரும்பியுள்ளனர். கடைசி மீனவரை மீட்கும் வரையில் தேடும் பணி தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த 14 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் புயலினால் பாதித்த விவசாய நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் அதற்கான நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்படும் என  முதலமைச்சர் பழனிசாமி    ஸ்டாலின் கேள்விக்கு  பதிலளித்தார்…
source: dinasuvadu.com

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *