,
Tamilnadu CM MK Stalin

நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.! இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் பயணம்.!

By

பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை புறப்படுகிறார். 

பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவதற்காக இந்த எதிர்க்கட்சி கூட்டத்தை நிதிஷ்குமார் ஏற்பாடு செய்து உள்ளார்.

இந்த கூட்டத்தில் இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட முக்கிய பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட உள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை பீகாரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்காக இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து பீகாருக்கு தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Dinasuvadu Media @2023