ரூ.325 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு புதிய இயந்திரம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கம்.!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் புதிய நிலக்கரி இயந்திரத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தூய்மை பணியாளருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மேலும்,  பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலக்கரி இறக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தார்.

325 கோடிக்கு புதிய இயந்திரம் : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு தற்போது புதியதாக நிலக்கரி இறக்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு சார்பில் சுமார் 325 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாடுகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

80 கோடி ரூபாய் சேமிப்பு : இந்த 325 கோடி ரூபாய் புதிய நிலக்கரி இறக்கும் இயந்திரம் மூலம் அதிக திறன் கொண்டு நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் வரையில் நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். ஒரு டன்னிற்கு (1000 கிலோ) 700 ரூபாயில் இருந்த செலவானது தற்போது 500 ரூபாயாக குறையும். இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வருடத்திற்கு 80 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு கிடைக்கும் எனவும் கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment