#BREAKING: 14 பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம் உட்பட 5 திட்டங்களை துவங்கி வைத்த முதல்வர்..!

தலைமைச் செயலகத்தில் 5 வகையான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி  தலைமைச் செயலகத்தில் 5 வகையான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கக்கூடிய திட்டத்தை 10 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்திருக்கிறார். 14 பொருட்கள் தொகுப்பு அடங்கிய பையில் கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுத்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம் ,கடலை பருப்பு 250 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகு 100 கிராம் உள்ளிட்ட 14 பொருட்களில் இடம்பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து கொரோனா நோய்க்கு நிவாரணமாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது தவணையாக ரூ.2000  வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். வரும் 5-ஆம் தேதி ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணையாக ரூ.2000 பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் நோயால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் நோயால் உயிரிழந்த முன் களப்பணியாளர்களான  மருத்துவர், காவலர் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதுமட்டுமில்லாமல்  தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் செயல்படக்கூடிய கோயில்களில் சம்பளமின்றி பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார்.

murugan

Recent Posts

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

19 mins ago

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…

39 mins ago

மாணவர்களுக்கு இன்று முதல் ஜாலி தான்…தொடங்குகியது கோடை விடுமுறை.!

Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…

1 hour ago

மீண்டும் மோதிக்கொள்ளும் குஜராத்- டெல்லி !! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

1 hour ago

CSKvsGT : சதம் விளாசிய ஸ்டோய்னிஸ்… சென்னையை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி..!

IPL2024:  லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…

9 hours ago

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

11 hours ago