திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு முதல்வர் வாழ்த்து

வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு முதல்வர் வாழ்த்து.

திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்!

‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக!’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here