போயிங், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு.!

வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய

By balakaliyamoorthy | Published: Jun 02, 2020 08:11 PM

வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு. 

உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். யுனைடெட் டெக்னலாஜி, ஜெனரல் எலக்ட்ரிக், சாப்ரான், லியானார்டோ நிறுவனம், ஹனிவெல்,போயிங், ரோல்ஸ் ராய்ஸ், ஏர் பஸ், லாக்ஹீட் மார்டின் உள்பட உலகின் 9 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழகத்தில் நேரடியாக முதலீடு செய்திட முதல்வர் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வரின் கடிதத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc