#Maharashtra:அதிகரிக்கும் கொரோனா நாக்பூரில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் மூடல்.

இந்தியாவிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மார்ச் 7 வரை மூடப்படும் என்று நாக்பூரின் கார்டியன் அமைச்சர் நிதின் ரவுத் திங்களன்று அறிவித்தார். ஹோட்டல்களும் உணவகங்களும் 50% அளவில்  இயங்கும் என்றும் பிப்ரவரி 25 க்குப் பிறகு மார்ச் 7 வரை திருமண மண்டபங்கள்  மூடப்படும் என்றும் மேலும், வார இறுதிகளில் முக்கிய சந்தைகள் மூடப்படும் அவர் கூறினார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு பொது மக்கள் தான் காரணம் என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk