சுத்தமே சுகம் தரும் – ஆரோக்கியத்தை பேணுவோம் அழகாய் வாழ்வோம்!

நாம் உடல் சுகத்துடனும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு காரணம் ஒன்று நமது உணவுகளாய் இருந்தாலும், அதற்கு முதல் முக்கியமான காரணம் உடல் சுத்தம் தான். உடல் சுத்தமாக இருந்தால் தான் உள்ளமும் சுத்தமாக இருக்கும். 

நமது முன்னோர்கள் கைகழுவி சாப்பிடுவது, குளித்த பின்பே கூழ், கந்தையானாலும் கசக்கி கட்டு ஆகிய பழமொழிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால், நாம் சாப்பிடுகையில் கை கழுவும் வழக்கத்தை கூட துறந்துவிட்டோம். 

உலகம் முழுவதும் இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி உலக சுகாதார தினமாக கருதப்படுகிறது. ஆனால், தற்போதைய கலாச்சாரம் மாறிவிட்டது. அண்மை வைரஸ் காலங்களில் கொரோனா வைரஸ் பரவுதலின் அச்சம் உண்டாக்கியதால் இந்த பழங்கால பழக்கவழக்கங்கள் உண்டாகியுள்ளது.

இது இருக்கும் வரை இல்லாமல் காலம் முழுவதும் கடைபிடித்து வந்தால் நாம் சுகாதாரமாக இன்னும் பல காலங்களுக்கு வாழலாம். சுத்தமாய் இருப்போம் சுகமாய் வாழ்வோம். 

author avatar
Rebekal