மாணவர்கள் கவனத்திற்கு… 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

10ஆம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் ஜூன் 27 தேர்வுகள் ஆரம்பித்து, ஜூலை 4 தேர்வு முடிவடைகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்தாண்டு10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த வருடம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில்,

  • ஜூன் 27 – மொழிப்பாடம்.
  • ஜூன் 28 – ஆங்கிலம்.
  • ஜூன் 30 – கணிதம்.
  • ஜூலை 1 – விருப்பத்தேர்வு மொழிபடம்.
  • ஜூலை 3  – அறிவியல்.
  • ஜூலை 4 – சமூக அறிவியல்.

என கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள்/ தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.