#Breaking : 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10 -ஆம் தேதி வெளியீடு

#Breaking : 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10 -ஆம் தேதி வெளியீடு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 10 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள   10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற  10 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை    இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு  tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக ,மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் வருகின்ற 17 ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக அரசுத் தேர்வுத்துறை படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம்   ( http://www.dge.tn.gov.in/) மூலம் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

 என்றும் ஆகஸ்ட் 17 முதல் முதல் 25-ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!