குடிமைபணி தேர்வு.! வயது வரம்பை ஒரு முறை அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம்.!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய அரசு பணிகள் தேர்வெழுதாமல், தற்போது வயதை காரணமாக கொண்டு தேர்வெழுத முடியாமல் தவிக்கும் இளைஞர்களின் வயது வரம்பை ஒருமுறை கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய – மாநில அரசு தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த காலகட்டத்தில், தங்களது வயதை காரணமாகக் கொண்டு தற்போது தேர்வு எழுத முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதம் மூலம் மத்திய அரசு குடிமைபணியியல் தேர்வு உட்பட பல்வேறு மத்திய அரசு தேர்வுகளை எழுத கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தவறவிட்ட தேர்வர்களுக்கு ஒரு முறை நடவடிக்கையாக தேர்வுகளின் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்கனவே நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேர்வை தவற விட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளித்ததை இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிமை பணிகள் உட்பட மத்திய அரசு பணிகளில் பணியாற்ற வேண்டும் என்று காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனிவுகளை கனிவுடன் பரிசோதிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு கூடுதலாக ஒரு முயற்சியை வழங்கிட வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுத கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment