Sundar c: விஜய்க்காக எழுதிய கதையில்அஜித் நடித்தது குறித்த ஸ்வாரசியமான தகவலை இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காமெடி கலந்த திகில் திரைப்படமான இதில், தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக, இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சுந்தர் சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க வந்து இருந்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “விஜய் வைத்து படம் எடுத்த பிறகு பலமுறை ஆசைப்பட்டு இருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி ‘உன்னை தேடி’ என்கிற திரைப்படத்தின் கதையை அப்போது எழுதி வைத்திருந்தார்.
விஜயிடம் அந்த கதையை சொல்லியுள்ளார், ஆனால் அந்த கதையில் அவர் நடிக்க வில்லையாம். பின்னர், அந்த கதையில் நடிக்க, நடிகர் அஜித் விருப்பம் தெரிவித்ததால், உன்னை தேடி படத்தில் அஜித் நடித்திருப்பார்.
சுந்தர் சியை பொறுத்தவரை தனக்கு கதை சொல்வதற்கே அவ்வளவாக வராது என கூறிஉள்ளார். அதேபோல், விஜய்யிம் ஒரு பழக்கம் உண்டு ஒரு வழக்கத்தை முழுமையாக கேட்டு விட்டு தான் அதனை நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார்” என கூறினார்.
இதையடுத்து, “சமீபத்தில் ஒரு கதை சொன்னேன், அது இடைவேளை வரை அவருக்கு பிடித்தது, 2வது பாதி பிடிக்கவில்லை. ஆனால் அவருடைய முடிவதான் சரியாக இருந்தது. இதே கதையை படமாக எடுத்து ஜெயித்து காட்டுகிறேன் என எடுத்தேன். இறுதியில் படம் ஊற்றிக்கொண்டது. அது என்ன படம் எனச் சொல்ல மாட்டேன், சொன்னால் அதில் நடித்தவரின் மனம் புண்படும்” என்று கூறினார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…