பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

பாடகர் யேசுதாஸ் உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவரும் செய்திகள் உண்மை இல்லை என்று யேசுதாஸின் மகன் கூறியுள்ளார்.

K. J. Yesudas

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்களில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாடகர் K.J.யேசுதாஸ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தனது தந்தை அமெரிக்காவில் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை எனவும் விளக்கியுள்ளார். மேலும், அவர் பூரண நலத்துடனும், நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று அவரின் உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார். ஆகவே அவர் நலமுடன் இருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்னனர்.

யேசுதாஸ்

யேசுதாஸ் தனது 60 வருட இசை வாழ்க்கையில், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட பல மொழிகளில் 50,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஆங்கிலம், அரபு, லத்தீன் மற்றும் ரஷ்ய மொழிகளிலும் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எட்டு முறை பெற்ற சாதனையை யேசுதாஸ் படைத்துள்ளார். ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 11 பாடல்களைப் பாடி சாதனையும் படைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்