ஆயிரம் கோடி வசூலை கடந்த புஷ்பா 2! பாகுபலியை பறக்கவிட்டு புது சாதனை!
மிக விரைவாக ரூ.1,000 கோடி வசூலைக் குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.
சென்னை : வசூல் சாதனை என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூலை குவித்து வருகிறது. ஏற்கனவே, படம் வெளியான முதல் நாளிலே 291 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது ஆர்.ஆர்.ஆர் படத்தை பின்னுக்கு தள்ளியது.
அந்த சாதனையோடு மட்டும் புஷ்பா 2 நிற்கவில்லை அடுத்தடுத்த நாட்களில் அதிகம் வசூல் செய்து 3 நாட்களில் ஹிந்தியில் அதிகம் வசூல் செய்த படம், அதிவேகமாக 300 கோடி கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த சாதனைகளை தொடர்ந்து தற்போது இந்திய சினிமாவையே வியர்த்து பார்க்க வைக்கும் அளவுக்கு பெரிய சாதனை ஒன்றை படைத்தது இருக்கிறது.
அது என்ன சாதனை என்றால் இந்திய சினிமாவில் அதி வேகமாக உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனை தான் . புஷ்பா 2 படம் ரூ.1000 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருக்கிறது. இதற்கு முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடிகள் வசூல் செய்து அதிவேகமாக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையை படைத்திருந்தது.
தற்போது அந்த சாதனையை பறக்கவிடும் வகையில், புஷ்பா 2 படம் வெளியான 6 நாட்களிலே ரூ.1002 கோடி வசூல் செய்து விரைவாக 1000 கோடிகள் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும், இதற்கு முன்பு ஆயிரம் கோடிகள் வசூலை கடந்த படங்கள் கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 AD ஆகிய படங்கள் 16 நாட்களில் ரூ.1000 கோடிகள் வசூல் செய்திருந்தது.
அதே சமயம் ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான் படங்கள் 18 மற்றும் 27 நாட்களில் ரூ.1000 கோடி வசூலை கடந்தது. புஷ்பா 2-வுக்கு இன்னும் அதிகமான வரவேற்ப்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.