4 நாளில் ரூ.8,000 கோடி... DC-யையே முந்தி மிரட்டும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே!

'Spider-Man: Brand New Day' உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 4 நாட்களில் ரூ.8,000 கோடிக்கும் மேல் வசூலித்து, DC-யின் Superman மற்றும் Supergirl படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.

Hero Image

டெல்லி: மார்வெல் மற்றும் சோனி பிக்சர்ஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் பல புதிய சாதனைகளை தினந்தோறும் நிகழ்த்தி வருகிறது தற்போது, தனது போட்டி நிறுவனமான டிசி (DC) ஸ்டுடியோஸின் அண்மைக்கால வசூல் சாதனைகளையும் இப்படம் தவிடுபொடியாக்கியுள்ளது.

டிசி யுனிவர்ஸின் (DCU)Soft-Reboot தொடக்கமாக கடந்த ஆண்டு வெளியான ஜேம்ஸ் கன்னின் 'சூப்பர்மேன்' (Superman) மற்றும் ஜூன் மாத இறுதியில் வெளியான 'சூப்பர்ஹேர்ள்' (Supergirl) ஆகிய இரண்டு திரைப்படங்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் உலகளாவிய வசூல் (Combined Worldwide Gross) சுமார் ரூ.7,100 கோடியாகும் ($850+ மில்லியனுக்கும் மேல்) ஆனால், ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள புதிய ஸ்பைடர்மேன் திரைப்படம், திரையரங்குகளில் வெளியான வெறும் 4 நாட்களில் ஒட்டுமொத்தமாக ரூ.8,000 கோடிக்கும் மேல் ($927 மில்லியன்) வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றிலேயே 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய தொடக்க வார இறுதி (Opening Weekend) வசூலைப் பெற்ற படம் என்ற வரலாற்றுப் பெருமையை இந்த ஸ்பைடர்மேன் படம் பெற்றுள்ளது.

இந்தியாவிலும் சாதனைப் பயணம்

இந்திய திரையரங்குகளில் முதல் நாளில் ரூ.72.44 கோடி வசூலித்து சாதனை படைத்த இத்திரைப்படம், நான்கு நாட்களின் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.306 கோடிக்கும் மேல் மொத்த வசூல் (Gross) செய்து மிரட்டியுள்ளது.

தமிழகத்திலும் வசூல் வேட்டை

'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' திரைப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸான முதல் நாளில் ரூ.5.10 கோடி வசூலித்த நிலையில், அடுத்தடுத்த வார இறுதி நாட்களில் ரசிகர்களின் பேராதரவோடு பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்தி, கடந்த 4 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.28.60 கோடிக்கும் மேல் பிரம்மாண்டமாக மொத்த வசூல் (Gross) செய்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 நாளில் ரூ.8,000 கோடி... DC-யையே முந்தி மிரட்டும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே!